சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர உறுதி ஏற்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 2017-11-27
தமிழகத்தில் இரண்டாயிரம் புதிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2017-11-27
சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை; 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் 2017-11-27
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கூடுகிறது ஆட்சி மன்றக் குழு கூட்டம்; ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படலாம் என தகவல்…. 2017-11-27
அர்ச்சகருக்கு பயிற்சி பெற்றுள்ள 206 பேரை தமிழக அரசு உடனடியாக பணியமர்த்த வேண்டும்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 2017-11-27
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்; காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு 2017-11-27
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-11-26
அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் குறித்த விசாரணை டெல்லியில் டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். 2017-11-26