குமரி கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-26
நடிகர் ரஜினிகாந்த் இன்று முதல் 6 நாட்களுக்கு தமது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது அவரின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017-12-26
தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லாத நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். 2017-12-26
போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைய தினத்திற்குள் வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு… 2017-12-26
ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு செய்து, கட்சியில் உள்ள களைகள் அகற்றப்படும்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்… 2017-12-26
டிடிவி தினகரனை கவனிக்கப்படும் நபராக உயர்த்தியது பாஜகவின் தவறான அரசியல் நிலைபாடுகள் தான்; சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி 2017-12-26
அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை தீவிரமாகும்; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை 2017-12-26
தமிழகத்தில் அடுத்த ஒரு வார காலத்துக்கு இயல்பைவிட மழை குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2017-12-25