இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு.

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 461 புள்ளிகள் உயர்வுடனும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 159 புள்ளிகள் அதிகரித்தும் நிறைவடைந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து 74 ரூபாய் 21 காசுகளாக இருந்தது. 24 காரட் சுத்த தங்கம் 10 கிராம் விலை 37 ரூபாய் உயர்ந்து, 31 ஆயிரத்து 320 ரூபாயாக அதிகரித்தது.

கட்டி வெள்ளி விலை ஒரு கிலோ 47 ரூபாய் உயர்ந்து, 38 ஆயிரத்து 668 ரூபாயாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை பேரல் 11 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 563 ரூபாயாக உள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் விலை ஒரு கிராம் சென்னையில் 4 ரூபாய் குறைந்து 2968 ரூபாய்க்கும், சவரன் 32 ரூபாய் சரிந்து 23 ஆயிரத்து 744 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் விலை 10 காசுகள் குறைந்து 41 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *