வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் தெற்கு இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை இல்லாத காரணத்தால் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் நிலவும் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் வானிலை ஆய்வு மையம் […]

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவிடம் இழந்த இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் இந்தியா தோல்வியுற்றால் தொடரை இழந்து […]

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த 2 வாரங்களாக பற்றி எரியும் காட்டுத் தீக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் சேதமாகியுள்ளன.

வெஞ்சுரா மற்றும் சாண்டா பார்பரா பகுதிகளில் தாமஸ் என்று பெயரிடப்பட்டுள்ள காட்டுத் தீ கடந்த வாரம் பற்றியது. 2 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களையும் நாசமாக்கிய இந்த காட்டுத் தீ மாண்டெசிடொ, சம்மர்லேண்ட் கவுன்ட்டிகளை நோக்கி பரவி வருகிறது. ஆறாயிரத்துக்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விமானங்கள் மூலமும் தீயை அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காற்றின் வேகம் காரணமாக மலை சார்ந்த வனப் […]

தங்கத்தின் விலை பவுனுக்கு 21 ஆயிரத்து 752 ரூபாய்க்கு விற்பனையாகிறது…

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாயிரத்து 719 ரூபாய்க்கும், பவுன் 21 ஆயிரத்து 752 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 39 ரூபாய் 20 காசுகளுக்கும், கட்டிவெள்ளி கிலோ 39 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது, தாம் வாங்கிக் கொடுத்த இரண்டு பேட்டரிகள் எதற்காக பயன்படப் போகிறது என்று தமக்குத் தெரியாது என பேரறிவாளன் கூறியதாகவும், ஆனால் அவரது வாக்குமூலத்தில் இருந்து அந்த பகுதியை தாம் நீக்கிவிட்டதாகவும் விசாரணை அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார். தியாகராஜனின் இந்த கருத்தை சுட்டிக்காட்டி தன்னை சிறையில் இருந்து விடுதலை செய்யுமாறு, உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு […]

குஜராத்தில் ஓய்ந்தது 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரம்; காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதி என ராகுல்காந்தி பேட்டி…….

குஜராத் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று மாலையுடன் முடிவுற்றது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடந்த 9ம் தேதி 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவானது. இதையடுத்து குஜராத் மாநிலத்தின் மத்திய மண்டலத்திலும், வடக்கு மண்டலத்திலும் உள்ள 93 தொகுதிகளில் நாளை 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. […]

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை; விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து வரவேற்பு…

உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி உடுமலை பேருந்து நிலையத்திற்கு சென்ற சங்கர் –கவுசல்யா தம்பதியினரை மோட்டார் சைக்கிளில் வந்த கூலி படையினர் சரமாரியாக அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங் களால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் உயிரிழந்தார். படுகாயம் […]

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரண உதவி; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி…

ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். குமரி மாவட்டத்தை ஒகி புயல் கடந்த 30ம் தேதி தாக்கியதில் மாவட்டம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. மேலும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்களும் இந்த புயலில் கரை திரும்ப முடியாமல் மாயமானார்கள். இதையடுத்து மீனவர்களை மீட்க கோரி அவர்களது குடும்பத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புயல்குறித்து அண்மையில் […]

குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்; நாகர்கோவிலில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு……

ஒகி புயல் பாதித்த குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒகி புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்று மாயமான மீனவர்களை மீட்க வேண்டும், குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரியில் டிசம்பர் 13ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் […]

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாத்தாள்; உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தகவல் ….

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வில் அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 10ம் தேதியன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் இல்லை எனவும், தமிழகத்தில் வழங்கப்பட்ட வினாத்தாள்கள் கடினமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஎஸ்இயை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் மோகன் […]