சீக்கியர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட 88 பேருக்கு தண்டனையை உறுதிசெய்தது உயர்நீதிமன்றம்

டெல்லியில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை செய்த வழக்கில் 88பேரின் தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

1984 அக்டோபர் 31ஆம் நாள் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய மெய்காவலர்களால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தச் செய்தி அறிந்ததும் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

கிழக்கு டெல்லியில் திரிலோக்புரி என்னுமிடத்தில் வீடுகளைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும், சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் 88பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

விசாரணை நீதிமன்றம் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பளித்ததுடன் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து 88பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதிப்படுத்திய உயர்நீதிமன்றம் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *