எண்பது ரூபாயை எட்டியது ஒரு லிட்டர் டீசல் விலை..பெட்ரோல் விலையும் இன்று அதிகரிப்பு

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை எண்பது ரூபாயைக் கடந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாக வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டே மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், பெட்ரோல் 7 ரூபாயும் அதிகரித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 11 காசுகள் உயர்ந்து 86 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையாகிறது. இதேபோல் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து 80 ரூபாய் 04 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *