கர்நாடகத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நீதிபதி இன்று பதவியேற்பு

கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பணிமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி வினீத் கோத்தாரி, இன்று பதவியேற்றார். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமனி, நீதிபதி வினீத் கோத்தாரிக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்

ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரி, பின்னர் கர்நாடக மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வினீத் கோத்தாரி பதவியேற்றதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 14 பதவியிடங்கள் காலியாக உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *