புதன் கிரகத்தை ஆய்வு செய்யும் ராக்கெட் சனிக்கிழமை ஏவப்படும்

சூரியக் குடும்பத்தில் சிறிய கோளான புதன் கிரகத்தை ஆய்வு செய்யும் ராக்கெட் சனிக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.

பிரெஞ்ச் கயானா ஏவுதளத்திலிருந்து புறப்பட உள்ள ராக்கெட்டுக்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. ஸ்விப்ட் பிளானட்  என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை ஜெர்மனி அரசு ஏற்று நடத்த உள்ளது. ஏழு ஆண்டுகள் பயணித்து கிட்டத்தட்ட தொள்ளாயிரம் கோடி கிலோமீட்டர்களைக் கடந்து சென்று புதன் கிரகத்தை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக புதன் கிரகத்தின் சுற்றுப்புறம் மற்றும் அதன் வட்டப்பாதை போன்றவற்றை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் விளைவாக சூரியக் குடும்பம் தோன்றிய வரலாற்றை மேலும் கூடுதலாக அறிந்து கொள்ளமுடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *