இங்கிலாந்தில் பிரமாண்ட போர்க்கப்பலான ஹெச் எம் எஸ் குயின் எலிசபெத் பாசறை திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. இந்த விமானம் தாங்கிக் கப்பல் உலகின் பல்வேறு நாடுகளுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கிறிஸ்துமசை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்தக் கப்பல் இங்கிலாந்துக்குத் திரும்புவது வழக்கம்.
கப்பல் பாசறை திரும்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு கப்பலில் இருந்த 100க்கும் மேற்பட்ட வீரர்கள் வாத்தியக் கருவிகளை இசைத்து மகிழ்ந்தனர். இறுதியாக ஹெச் எம் எஸ் கப்பல் போர்ட்ஸ்மவுத் துறைமுகம் வந்து சேர்ந்தது.