இங்கிலாந்து இளவரசர் ஹாரி சென்ற விமானம் விபத்தில் இருந்து தவிர்ப்பு

இங்கிலாந்து இளவரசர் ஹாரி சென்ற விமானம் ஆஸ்திரேலியாவில் விபத்தில் சிக்க இருந்தது தெரியவந்துள்ளது.

மனைவி மேகன் மெர்கலுடன் அவர் சென்ற விமானம் சிட்னியில் தரையிறங்குமுன், அதே ஓடுபாதையில் வேறொரு விமானம் இறங்கிக் கொண்டிருந்தது. இதனை கவனித்த விமானி துரிதமாக செயல்பட்டு சட்டென்று விமானத்தை மேலெழுப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில், டோங்கா என்ற தீவுக்குச் சென்ற ஹாரி தம்பதிக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, கொசுக்களைப் பற்றிய பாடல் ஒன்றைக் கேட்டு, கண்களில் நீர் வரும் அளவிற்கு மேகன் வயிறு குலுங்கக் குலுங்கச் சிரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *