ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கல்லுக்கு செல்லுமிடமெல்லாம் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மெல்பர்ன் நகரில் தங்களை வரவேற்ற பள்ளிக்குழந்தைகளுடன் உரையாடிய அவர்கள், உலக அளவில் நீண்ட வழித்தடம் கொண்ட மெல்பர்ன் நகரின் டிராமிலும் பயணித்தனர்.

பின்னர், கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடிய அவர்கள், கடலில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *