அமெரிக்க அதிபர் மனைவி பயணம் செய்த விமானத்தில் திடீர் புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலனியா பயணம் செய்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இது தொடர்பாக பேசிய டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் கிரிஸம், ஒபியோடைசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்ப்பதற்காக அவர் வாஷிங்டனில் இருந்து ஃபிலடெல்பியா புறப்பட்டதாகக் கூறினார். அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் உள்பகுதியில் இருந்து புகை வந்ததாகவும், இதையடுத்து வாஷிங்டனில் உள்ள ராணுவ விமானத் தளத்தில் மெலனியா பயணம் செய்த விமானம் அவசரமாகக் தரையிறக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும் ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *