அமெரிக்கர்களை செல்வந்தராக கனவு காண வைக்கும் லாட்டரி மோகம்

சொந்த வீடு வாங்கலாம், சொகுசாக வாழலாம், வேலையை விடலாம் என பல்வேறு ஆசைகளைக் காட்டி அமெரிக்க மக்களை வாட்டி வதைக்கிறது லாட்டரி மோகம். மெகா மில்லியன் ஜாக்பாட் லாட்டரி குலுக்கல் ஒன்று இன்று நடைபெறுகிறது.

இதன் மொத்தப் பரிசுத் தொகை ஒரு பில்லியன் டாலர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆறு லக்கி எண்கள் யாருக்கும் இல்லாததால் மீண்டும் இதன் குலுக்கல் நடத்தப்படுகிறது. அப்போது 667 மில்லியன் டாலராக இருந்த பரிசுத் தொகை மேலும் உயர்ந்துள்ளது.

இதனை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் அலை மோதினர். கணினி திரை மூலம் எண்களை தேர்வு செய்து பணம் செலுத்தி டிக்கட்டை வாங்கிச் செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *