8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது இந்தியா

8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது.

2017 – 2018ஆம் ஆண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 32.5 மில்லியன் டன்களாக இருந்தது. 2018 – 2019 ஆண்டிலும் இதே அளவு உற்பத்தியாகியுள்ளது. உள்நாட்டு தேவையை விடவும் கூடுதல் சர்க்கரை கையிருப்பு உள்ளதால் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது. 6 லட்சம் டன் மூல சர்க்கரையும், 2 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது. சீனாவிற்கு சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்புதலும் கிடைத்துள்ளது. இந்தோனேசியாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதி

2017-2018 – 32.5 மில்லியன் டன்

2018-2019 – 32 மில்லியன் டன்

சர்க்கரை ஏற்றுமதி ஒப்பந்தம்

8,00,000 டன் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம்

இலங்கை, ம.கிழக்கு நாடுகள் இந்தியாவுடன் ஒப்பந்தம்

ஒப்புதல் அளித்தது – சீனா

பேச்சுவார்த்தையில் – இந்தோனேசியா

மூல சர்க்கரை – 6 லட்சம்

வெள்ளை சர்க்கரை – 2 லட்சம் டன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *