சென்டினல் தீவில் வெளியாட்களின் சடலத்தை என்ன செய்வர்?

சென்டினல் தீவு பழங்குடியினர், வெளிநபர்களைக் கொன்ற பின் அந்த உடல்களை என்ன செய்கின்றனர் என்பதை அறிய, விசாரணை அதிகாரி ஒருவர், மானுடவியல் ஆய்வாளர்களின் உதவியை நாடியுள்ளார்.

சென்டினல் தீவு வாசிகள், அங்கு வரும் வெளியாட்களை அம்பெய்து கொன்று வருகின்றனர். அவர்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில், அங்கு சென்ற அமெரிக்கர் ஜான் கொல்லப்பட்டார். தடைசெய்த தீவுக்கு அழைத்துச் சென்ற மீனவர்கள், ஜானின் சடலத்தை அவர்கள் புதைத்தபோது பார்த்ததாகக் கூறியுள்ளனர்.

அமெரிக்க தரப்பில் அவரின் உடலைக் கேட்டுள்ளதால், அந்தமான், நிக்கோபர் தீவுகளின் காவல் உயரதிகாரி தீபேந்திர பதக், அதை மீட்க திட்டமிட்டுள்ளார். ஆபத்தான தீவை அணுகுவது எப்படி? என இதேபோன்ற பணிக்காக 2 ஆண்டுகளுக்கு முன் அங்கு சென்ற கமேண்டோ பிரவீனிடம் கோப்புகளைக் கேட்டுள்ளார்.

மானுடவியலாளரின் தகவல்படி, அங்கு வருபவர்களை அச்சுறுத்தும் வகையில், சில நாட்களுக்குப் பின், வெளியாட்களின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை மூங்கிலில் கட்டி, தீவுக் கரையில் நிறுத்தி எச்சரிப்பது அவர்களின் பாணியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *