கர்நாடகாவில் பிரச்சார பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தியை நோக்கி வீசப்பட்ட மாலை, மிகச்சரியாக அவர் கழுத்தில் விழுந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த மாநிலத்தின் தும்கூருக்கு வந்த ராகுல் காந்தி, திறந்த வாகனத்தில் தொண்டர்களையும், பொதுமக்களையும் பார்த்து கையசைத்து படி சென்றார். அப்போது, அவரை நோக்கி தொண்டர் ஒருவர் மாலை ஒன்றை வீசினார். அந்த மாலை மிகச்சரியாக, ராகுல் காந்தியின் கழுத்தில் விழுந்தது. சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட இந்த காட்சிகள் இப்போது வேகமாக பரவி வருகின்றன.
2018-04-06