11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. போட்டிக்கான வீர்ர்களின் ஏலம் வரும் 27 மற்றும் 29ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏப்ரம் 7ம் தேதி முதல் மே 27ம் தேதி வரை 62 நாட்கள் இந்த ஆண்டிற்கான போட்டிகள் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாக கவுன்சில் அறிவித்துள்ளது. முதல் போட்டியையும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்தவும் ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இரவு 8 மணிக்கு தொடங்கப்படும் போட்டிகள் இரவு 7 மணிக்கு தொடங்கும் என்றும், 4 மணிக்கு தொடங்கும் போட்டிகள் 5.30 மணிக்கும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-01-23