தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் 6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவுகிறது. சில பகுதிகளில் அவ்வப்போது கடும் குளிரும், மூடுபனியும் நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக உதகை மற்றும் வால்பாறையில் தலா 6 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. மேலும் குன்னூரில் மற்றும் கொடைக்கானலில் 8 மற்றும் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. சென்னை விமான நிலையத்தில் 19 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. அடுத்த சில தினங்களுக்கு இதே நிலை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *