18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடிவடிக்கை இருக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடிவடிக்கை இருக்கும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, தமிழக பொறுப்பு ஆளுநர், சபாநாயகர், முதலமைச்சர் ஆகியோர் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடுவதாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய விவகாரத்தில் முதலமைச்சர் மற்றும் சபாநாயகருக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசு விழாக்களை அரசியல் மேடையாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமைச் செயலாளருக்கும், குட்கா விவகாரத்தில் டி.ஜி.பி.க்கும் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் வரிப்பணத்தில் அரசு விழா என்ற பெயரில் அரசியல் விழா நடைபெறுகிறது என்று கூறினார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவுக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடிவடிக்கை இருக்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *