150 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணம்; ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பு…

150 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த அபூர்வ சந்திர கிரகணத்தை கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

1982 ஆம் வருடத்திற்கு பிறகு சூப்பர் நிலவு எனப்படும் ப்ளூ மூன், ரெட் மூன் மற்றும் சந்திர கிரகணம் ஆகிய மூன்றும் சேர்ந்து நேற்று காணப்பட்டது. சுமார் 152 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் மூன், ப்ளு மூன், பளட் மூன் ஆகிய அரிய நிகழ்வுகளுடன் இந்த சந்திர கிரகணம் நேற்று மாலை தோன்றியது. தமிழகத்தின் பல இடங்களிலும் சமவெளிப் பகுதியில் மக்கள் சந்திர கிரகணத்தை காண குவிந்தனர். சென்னை மெரினா கடற்கரையிலும் சந்திர கிரகணத்தை காண ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இதேபோல் கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி நிலையத்திலும் சந்திர கிரகணத்தை காண சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது.

சேலம் பழைய பேருந்து நிலையத்தில் சந்திர கிரகணத்தை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தொலைநோக்கி வழியாக சந்திர கிரகணத்தை பொதுமக்கள் குழந்தைகளுடன் குடும்பமாக கண்டு ரசித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *