ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி கெவ்லோன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் முண்ணனி வீராங்கனை பி.வி. சிந்து, ஹாங் காங்கின் வேனுஸ்யூட்டுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பி.வி. சிந்து 21க்கு 18, 21க்கு 10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றிகுகு முன்னேறினார். இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் பிரனாய் ஹாங்காங்கின் யுன் கானை எளிதாக வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
2017-11-23