வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு நிலை 24 மணி நேரத்தில் வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இதன் நகர்வை பொறுத்தே மழைக்கான வாய்ப்பை தீர்மானிக்க முடியும் என்று கூறிய அவர், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சிலபகுதிகளில் இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *