சீனாவில் மிகப்பெரிய மலைத்தொடரின் வழியே, அதிவேக ரயில் சேவையின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

ஷாங்ஜி மாகாணத்தில் உள்ள கின்லிங் மலைத்தொடர் சீனாவின் ஆல்ப்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் வழியே, ஷாங்ஜி – செங்டு மாகாணங்களை இணைக்கும் வகையில், அதிவேக ரயில் பாதை அமைக்கும் பணிகள் அண்மையில் நிறைவுற்றது. மொத்தம் 643 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரயில் பாதையில், நவீன வசதிகளுடன் இத்திட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது. ஜியான் – செங்டு ஆகிய நகரங்களை இணைக்கும் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, 250 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் அதிவே ரயிலின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன் மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான 16 மணி நேர பயணம், 3 மணி நேரமாகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *