விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாள் சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட எழுச்சிக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பங்கேற்பு

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலித் மற்றும் இசுலாமிய எழுச்சி நாள் பொதுக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள அயோத்தி நகரில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை, இந்துக் கரசேவகர்கள் மதச்சார்பின்மைக்கு எதிராக 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடித்து தகர்த்தனர். இதனை ஆண்டுதோறும் இசுலாமிய அமைப்புகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றன. இதே நாளன்று அம்பேத்கர் நினைவு நாளும் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டு தோறும் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாள் மற்றும் பாபர் மசூதி இடிப்புநாள், தலித் மற்றும் இசுலாமியர் எழுச்சி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி இன்று கோயம்பேடு மற்றும் வெளிச்சம் தொலைக்காட்சி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்.

இதையடுத்து ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நடைபெறும் பண்பாட்டு கலைவிழாவில் தலைமை வகித்து பங்கேற்கிறார். இந்த விழாவில் கவியரங்கம், இசையரங்கம், குழந்தைகள் அரங்கம் என பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

மாலை 6 மணி அளவில் ஒட்டேரி தாசமகானில் விடுதலை சிறுத்தைகள் இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பில் நடைபெறும் தலித் மற்றும் இசுலாமிய எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரையாற்றுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *