விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்திற்கு பெருகும் ஆதரவு… திரைப்படம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து

மெர்சல் திரைப்படத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்திருக்கும் மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. மெர்சல் பட சர்ச்சை தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ள பதிவில் திரைப்படம் என்பது தமிழ் மொழி கலச்சாரத்தின் வெளிப்பாடு என்றும், மெர்சல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழின் மதிப்பை குலைக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேப்போன்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் தமது கருத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் பேச்சு, படைப்பு சுதந்திரத்திற்கு திமுக என்றும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார். விமர்சனங்களை ஒழித்துக்கட்டும், பாஜகவின் முயற்சி ஜனநாயக கொள்கைகளுக்கு முரன்பாடனது என்று, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் திரு. மு.க.ஸ்டாலின்.

மெர்சல் படம் மூலம் சமூக கருத்துகளை கூறிய விஜய் மற்றும் அட்லிக்கு தென் இந்திய திரைப்பட சங்க பொதுசெயலாளர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் மெர்சல் படத்திலிருந்து காட்சிகளை நீக்க சொல்வது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது, காட்சிகளை நீக்க எந்த கட்சியும் உரிமை கோர முடியாது என்றும் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

மெர்சல் திரைப்பட தொடர்பாக பேசிய நடிகர் பிரபு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கச் சொல்லும் கருத்தில் தமக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்துள்ளார் நடிகர் பிரபு.

மெர்சல் திரைப்படம் தொடர்பாக நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில காட்சிகளை நீக்கச் சொல்வது அடக்குமுறை அரசியலில் வெளிப்பாடு என்று குறிப்பிட்டுள்ளார் கருணாஸ்.

மெர்சல் திரைப்படத்தில் வரும் காட்சிகளை யாருக்காகவும் நீக்கக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேபோல், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் ஆகியோரும் மெர்சல் திரைப்படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *