லா – லிகா கால்பந்து தொடரில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை 2-1 என வீழ்த்தி ஜிரோனா அதிர்ச்சி அளித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான 2017-2018 சீசன் ‘லா – லிகா’லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு போட்டியில் முன்னணி அணியான ரியல் மாட்ரிட், கேட்டலோனியாவில் அமைந்துள்ள ஜிரோனா அணியை எதிர்கொண்டது. இறுதியில் ஜிரோனா 2-1 என வெற்றி பெற்று ரியல் மாட்ரிட் அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. தற்போது வரை ரியல் மாட்ரிட் 10 போட்டிகளில் முடிவில் 20 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. பார்சிலோனா 10 ஆட்டத்தில் 28 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் இந்த சீசனில் இரண்டு தோல்விகளை சந்தித்துள்ளது. 6 வெற்றியும், இரண்டு போட்டியை டிராவும் செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *