ரூ.9 லட்சம் கோடி தங்கத்துடன் கடலில் மூழ்கிய கப்பல்

ஒன்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிமிட்ரி டோன்ஸ்கோய் ((Dimitrii Donskoi)) என்ற போர்க்கப்பல் கடந்த 1905ம் ஆண்டு ஜப்பானுடன் சுஷிமா ((Tsushima)) என்ற இடத்தில் போரில் ஈடுபடுத்தப்பட்டது.

அப்போது ஜப்பானின் சரமாரியான தாக்குதலில் அந்தக் கப்பல் கடலுக்குள் மூழ்கியது. அப்போது அந்தக் கப்பலில் 200 டன் அளவிலான தங்கக் கட்டிகள் தலைநகர் மாஸ்கோவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக் கூறப்பட்டது.

இந்நிலையில் தென்கொரிய கடல் பகுதியில் சுமார் ஆயிரத்து 400 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடப்பது ஷினில் என்ற குழுமம் ((Shinil Group)) கண்டுபிடித்துள்ளது. தங்கத்தை எடுத்துக் கொடுக்கவேண்டுமானால் தங்களுக்கு 10 சதவீதம் கமிஷனாக வழங்கவேண்டும் என ஷினில் குழுமம் ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *