விண்வெளி சுற்றுலா ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தியது அமேஸான்

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ராக்கெட்டை 9வது முறையாக அமேஸான் நிறுவனம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.ப்ளு ஆரிஜின் (Blue Origin) என்று பெயரிடப்பட்ட ராக்கெட் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து உள்ளுர் நேரப்படி நேற்று காலை 11 மணியளவில் ஏவப்பட்டது.

வழக்கமான தோற்றம் கொண்ட மற்ற ராக்கெட்டுகள் போல அல்லாமல் விசித்திர தோற்றம் கொண்ட ப்ளூ ஆரிஜின் ஏவப்பட்ட சில நொடிகளில் 100 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று அங்கிருந்து சுற்றுலா பயணிகளுக்கான கேப்சூல் எனப்படும் அறையை கழற்றி விட்ட பின்னர் வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.பின்னர் கேப்சூலும் வெற்றிகரமாக திரும்பியதாக அமேஸான் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *