ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் தீர்வு காண வேண்டும் ; பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்….

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 13-ம் தேதி பாக் பாக் வளைகுடா எல்லை பகுதிக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இரண்டு மீனவர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திட மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் நமது பாரம்பரிய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடிப்பதாகவும், படகுகளை பறிமுதல் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுபோன்ற சமயங்களில் இந்திய கடலோர காவல்படையினர் சரியாக தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தால், அவற்றை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். மேலும் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உடனடியாக தலையிட்டு, இதுபோன்ற சம்பவங்கள் இனி எதிர்காலங்களில் நிகழாத வண்ணம், பாதுகாப்புத்துறை அமைக்கத்திற்கு அறிவுரை வழங்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *