மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது… சென்செக்ஸ் புள்ளிகளின் வீழ்ச்சி மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான நம்பிக்கையின்மையை காட்டுவதாக ராகுல்காந்தி விமர்சனம்…

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு அதிகமாக சரிவைச் சந்தித்தது.

பட்ஜெட்டில் நீண்டகால முதலீடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டதையடுத்து 300 புள்ளிகள் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ் பின்னர் மீண்டது. இந்நிலையில் நேற்று இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடனேயே தொடங்கின. சென்செக்ஸ் நேற்று 199 புள்ளிகள் சரிவுடன் 35 ஆயிரத்து 707 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இந்நிலையில் தொடர்ந்து சரிந்த சென்செக்ஸ் குறைந்தபட்சமாக 35 ஆயிரத்து 295 புள்ளிகளைத் தொட்டது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை சரிந்தது. அதேபோன்று தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் குறைந்தது. 78 புள்ளிகள் சரிவுடன் 10 ஆயிரத்து 938 புள்ளிகளில் தொடங்கிய நிஃப்டி குறைந்தபட்சமாக 10 ஆயிரத்து 826 புள்ளிகளை தொட்டது. இதனிடையே பங்குச்சந்தை வீழ்ச்சி குறித்து தமது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சென்செக்ஸ் அதிகமாக வீழ்ச்சியானது, மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் மீதான நம்பிக்கை இன்மையை காட்டுவதாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *