உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை தொடங்கினார் நடிகர் விஜய்… தீவிர அரசியலில் களமிறங்குவாரா என ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு;

உலகளவில் ரசிகர்களை ஒன்றிணைக்க விஜய் மக்கள் இயக்கம் என்ற இணையதளத்தை நடிகர் விஜய், தொடங்கியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலுக்கு வர நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ரஜினி, கமல், விஷால் என நடிகர்கள் பலரும் அரசியல் பிரவேசம் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் உலகளாவிய தமது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடிகர் விஜய் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம். இன் என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் திடீரென இணையதளத்தை தொடங்கியிருப்பது முழுவீச்சில் அரசியலில் கால் பதிக்கப்போகிறாரா என்ற கேள்வியை அவரது ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது. ஏற்கனவே தமது இயக்கத்திற்கு தனி கொடியை அறிமுகம் செய்து அரசியல் ஆசையை வெளிப்படுத்தியவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *