இந்திய கால்பந்து வரலாற்றில் மிக சிறந்த கிளப் அணியான பெங்களூரு எப்.சி அணி இந்தாண்டு இந்தியன் சூப்பர் லீக் தொடரில் அறிமுகமாகவுள்ளது. பெங்களூரு எப்.சி அணியின் விளம்பர தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு எப்.சி அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராகுல் டிராவிட் , பெங்களூரு எப்.சி அணியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
2017-11-15