நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு; ஜனநாயகத்தில் யாரும் கட்சி தொடங்கலாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து

மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தில் உரையாற்றிய பின்னர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று அறிவித்திருப்பதன் மூலம் மதவாதத்திற்கும், ஆன்மீகத்திற்கும் உள்ள வித்தியாசங்களை அறிந்திருப்பார் என தாம் கருதுவதாக கூறினார். மேலும் ரஜினியின் அரசியல் வருகையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு எதிராக மாறுபாடான கருத்தை திணிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *