தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக 4 மருத்துவர்கள் வரவழைப்பு

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்த படியே சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வயது மூப்பின் காரணமாக, கருணாநிதியின் உடல் நலத்தில், நலிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக, கருணாநிதிக்கு காய்ச்சல் வந்திருப்பதாகவும், 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக் கொள்வதாகவும், வீட்டிலேயே மருத்துவமனையில் இருக்கும் வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை பார்க்க, யாரும், நேரில் வர வேண்டாம் கூறப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். திமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களும் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோபாலபுரத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிற்கு கூடுதலாக 4 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 2 மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் கூடுதலாக 4 மருத்துவர்கள் வருகை. காவேரி மருத்துவமனையை சேர்ந்த மேலும் 4 மருத்துவர்கள் கருணாநிதிக்கு தற்போது சிகிச்சை. மொத்தமாக 6 மருத்துவர்கள் கருணாநிதிக்கு கோபாலபுரம் இல்லத்தில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கருணாநிதிக்கு உடல் நலிவுற்றுள்ளதாக காவேரி மருத்துவமனை நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *