ஆள்கடத்தல் தடுப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..!

மனிதர்களை விலைக்கு வாங்குவதும் விற்பனை செய்வதும் குற்றமாக்கும் சட்டமசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஆயினும் இச்சட்டத்தால் பாலியல் தொழிலாளர்களுக்கு எந்த வித துன்புறுத்தலும் ஏற்படாது என்றும், குடும்ப நிர்ப்பந்தம் காரணமாக விலை மாதர்களாக மாறியவர்களை அரசு கருணையுடன் அணுகும் என்றும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி உறுதியளித்துள்ளார்.

இச்சட்ட மசோதாவின்படி  குழந்தைகளை, பெண்களை, ஏழைகளை பணத்துக்காக கொத்தடிமைகளாக விற்பதற்கு முடிவு கட்டப்படும் என்று மேனகா காந்தி தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும், விசாரணைகள் வழக்குகள் விரைவாக முடிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.  இச்சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனையும் குறைந்தபட்சம் ஒருலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *