தா.பாண்டியனை நேரில் பார்த்து நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனைத் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்குச் சென்று தா.பாண்டியனை நேரில் பார்த்து நலம் விசாரித்தார். அப்போது அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் பொன்முடி, சேகர்பாபு ஆகியோரும் சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *