இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதி

இந்தோனேசியாவில் லாம்போக் பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இரவில் தூங்கிக் கொண்டிருந்த போது கட்டடங்கள் குலுங்கியதை உணர்ந்து படுக்கைகளை விட்டு அலறியபடி அவர்கள் வீதிகளுக்கு ஓடினர். இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6 புள்ளி 4 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் மையம் மாதாராம் நகரின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 80 மைல் தூரத்தில் இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஜாவா உள்ளிட்ட தீவுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *