தலித் தலைவர்களின் முன்னோடி ஹென்றி தியாகராஜனுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும்; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை

சமூக நல்லணக்கத்தை கெடுத்து வரும் ஹெச் ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இந்திய மனித உரிமைக் கல்வி இயக்கம் மற்றும் தலித் விடுதலைக் கல்வி அறக்கட்டளை யின் நிறுவனரும் மேலாண் இயக்குனருமான முனைவர் என்றி தியாகராஜ் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 1980 களில் தலித் அரசியல் முழக்கங்கள் ஆரம்பித்தது, ஆனால் அதற்கு முன்னரே தலித்துகளுக்காக தொடர்ந்து போராடி வந்தவர் என்றி தியாகராஜ். என குறிப்பிட்டார் இன்று அவருடைய வழி காட்டுதல் இல்லாமல் யாரும் இல்லையென்றும் அதற்க்கு தாமும் ஒரு சான்று என்றும் உரையாற்றினார்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கவிஞர் வைரமுத்து தமிழுக்கு பல தொண்டு ஆற்றியவர் என்பது அனைவரும் அறிந்தே என்றும் சமூக நல்லணக்கத்தை கெடுத்து வரும் ஹெச் ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.

உள்ளாட்சி தேர்தலை மேலும் 6 மாதத்திற்கு தள்ளிப்போடும் எண்ணத்தில் தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும் விரைந்து உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசும் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முறைகேடுகளை அம்பலபடுத்தியது வரவேற்க்கத்தக்கது என்றும் நீதிபதி கர்ணனை சிறையில் அடைத்தது போல இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கூடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாகவும், ஜனநாயகத்தை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொல் திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *