தமிழக மக்கள் வளம் பல பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும்; ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்து

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பயிர் அறுவடையுடன் இணைந்த விழாவை கொண்டாடும் விவசாயிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். பொங்கல் விழா, மகர சங்கராந்தி, லோரி என நாட்டின் பல்வேறு பெயர்களின் அழைக்கப்படும் இவ்விழாக்கள் ஆரோக்கியத்தை வழங்கட்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக நாகரீகம், கலாச்சாரம், பெருமையை நிலைநாட்ட இப்பொங்கல் திருநாளில் உறுதியேற்போம் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பொங்கல் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் அறுவடை திருநாளாம் இப்பொங்கல் திருநாளில் தமிழ்நாட்டு மக்கள் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேபோல் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பொதுமக்களுக்கு தமது பொங்கல் வாழ்த்துகளை கூறியுள்ளார்.

பொங்கல் பண்டிகை முன்னிட்டு கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிச்சயமாக நாளை தை பிறக்க போகிறது. வழியும் பிறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழினத்தின் பாரம்பரியத் திருவிழாவான பொங்கல் திருவிழா நாளில் தமிழ் மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் உழவுத்தொழிலைப் பாதுகாக்க பொங்கல் திருநாளில் உறுதியேற்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்களை நடிகர் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு என்றும் நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, த.மா.க.தலைவர் ஜி.கே.வாசன், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கும் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *