தமிழகத்தில் நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரை 14 ஆயிரத்து 77 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சாலை விபத்து தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் , சாலை விபத்துகள், உயிரிழப்புகளை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் அக்டோபர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 14 ஆயிரத்து 77 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளதாகவும், 2017-ம் ஆண்டில் அக்டோபர் மாதம் வரை 86 ஆயிரத்து 873 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் பலனாக கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான விபத்துகளை ஒப்பிடுகையில், நடப்பாண்டில் ஐந்தாயிரத்து 145 சாலை விபத்துகளும், 525 உயிரிழப்புகளும் குறைந்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *