டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்தியேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2018ம் ஆண்டின் ஐபிஎஸ் போட்டிக்கான ஏலங்கள் கடந்த 28ம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தங்கள் அடுத்தக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளனர். அதன்படி இந்த ஆண்டின் தொடக்கம் முதலே பயிற்சியாளர்கள் தேர்வு பணியை தொடங்கிய டெல்லி அணி ராகுல் டிராவிட்டை அணியின் ஆலோசகராக நியமித்தது. தலைமை பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் டெல்லி அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்தியேலியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *