ஜெயா டிவி, திவாகரன், விவேக் வீடுகளில் இன்றும் சோதனை நடைபெறும் என வருமானவரித்துறை அறிவிப்பு ; சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக டிடிவி தினகரன் புகார்…..

வரி ஏய்ப்பு புகார் காரணமாக, வி.கே.சசிகலா, தினகரன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக, வருமானவரித்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரி, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களின் நிறுவனங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகை அலுவலகம், போயஸ்கார்டனில் உள்ள ஜெயா டி.வி.யின் பழைய அலுவலகம், வேளச்சேரியில் உள்ள ஜாஸ் அலுவலகம், படப்பையில் உள்ள மிடாஸ் மதுபான ஆலை உள்பட பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. சசிகலா, தினகரன் குடும்பத்தினர், உறவினர்களுக்கு சொந்தமாக 10-க்கும் மேற்பட்ட தொழில் குழுமங்கள் உள்ளன. இந்த தொழில் குழுமங்கள் மூலம் ஏராளமான போலி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், சோதனை நடத்தப்படுவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். இந்நிலையில், ஜெயா டிவி அலுவலகம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் திவாகரன் வீடு, நுங்கம்பாக்கத்தில் உள்ள இளவரசி மகன் விவேக் வீடு உள்ளிட்ட பல இடங்களில் இன்றும் சோதனை தொடரும் என வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *