கருணாநிதியை சந்தித்ததன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் பிரதமர் மோடி ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு….

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்ததன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மெர்சல் பட விவகாரத்தில் கருத்து தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனை காழ்புணர்ச்சியுடன் விமர்சித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜனை கண்டித்து அமைதி வழியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதைக்கண்டித்து, கரூர் மற்றும் மயிலாடுதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடியை எரித்து பாஜகவினர் அத்துமீறல் மற்றும் ரகளையில் ஈடுபட்டனர். இந்த மதவாத சக்திகளின் ஆதிக்க போக்கை கண்டித்து, மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, எழுச்சியுரையாற்றினார். அப்போது பேசிய அவர், கருணாநிதியை சந்தித்ததன் மூலம் கூட்டணியில் குழப்பத்தை பிரதமர் மோடி ஏற்படுத்துகிறார் என குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் காலூன்ற திராவிட கழகங்களை சீரழிக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது என்றும் காவல்துறை அதிமுக அல்லது பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற ஐயம் எழுகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வளர்ச்சி உள்ளது என்று எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *