சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகர் டெல்லி கணேஷ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பாரதியாரின் 136வது பிறந்த நாளை முன்னிட்டு, பாரதி சிறப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் டெல்லி கணேஷ் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று எந்த சட்டமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் நடிகர் விஷால் நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வந்துள்ளதாகவும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் நடிகர் டெல்லி கணேஷ் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *