சென்னையில் நதிக்கரையோரம் உள்ள வீடுகள் அகற்றுபடுவதைக் கண்டித்து , டிசம்பர் 11ம் தேதி போராட்டம்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னையில் நதிக்கரையோரம் உள்ள வீடுகள் அகற்றுபடுவதைக் கண்டித்து , டிசம்பர் 11ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களைப் போற்றும் வீரவணக்க நாளாக நவம்பர் 27ம் நாள், உலகம் முழுக்க தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் இந்நிகழ்ச்சியில் பேசிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், தமிழீழத்தை வென்றெடுக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எப்போதும் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வரவேற்கதக்கது என்று தெரிவித்தார். மேலும் பணப்பட்டுவாடா போன்றவை நடைபெறாமல் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்றும் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நதிக்கரையோரம் உள்ள வீடுகள் அகற்றுப்படுவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதனை கண்டித்து டிசம்பர் 11ம் தேதி சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *