சென்னையில் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

சென்னையில்,கழிவுநீர் லாரிகள்செல்வதற்கு குறைந்த அளவே நேரம்ஒதுக்கியதை கண்டித்து, லாரிஉரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள்போராட்டம் நடத்தினர்

சென்னை சாலைகளில் கழிவுநீர் லாரிகள் செல்வதற்கு போக்குவரத்து போலீசார் கட்டுபாடுகளை விதித்துள்ளனர். இதன்படி, இந்த வாகனங்களுக்கு காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி கழிவுநீர் லாரி உரிமையாளர்களும், ஓட்டுநர்களும், சுமார் 300 லாரிகளை சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே லாரிகளை நிறுத்தி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இரண்டு நாட்களில் பிரச்னைக்கு தீர்வு காணுவதாக போலீஸார் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *