சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலனை செய்யப்படும் ; எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு….

சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சிவகாசியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். தற்போது நகராட்சியாக உள்ள சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிசீலிக்கப்படும் என்றும், அதனுடன் திருத்தங்கல் நகராட்சி மற்றும் சித்துராஜபுரம், விஸ்வநத்தம் உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளும் இணைக்கப்படும் எனவும் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், சிவகாசி நகரத்திற்கு 33.48 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுற்றுச்சாலை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதற்கான நில எடுப்புப் பணிகள் 82 கோடியே 45 இலட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், விழா மேடை அருகே அமர்ந்திருந்த இரண்டு பெண்கள், திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தங்கள் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களை உடனடியாக தடுத்து நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *