கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடும் முடிவை கைவிட வேண்டும்; பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்….

கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடும் முடிவை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், இந்திய அரசுக்கு சொந்தமான அச்சகம் செயல்பட்டு வருகிறது. இந்த அச்சகத்தில் மத்திய, அரசு அலுவலகங்களுக்கு தேவையான அனைத்து விண்ணப்ப படிவங்கள் மற்றும் அஞ்சல் துறை , ரயில்வே துறைக்கு தேவையான படிவங்கள் அச்சடிக்கபட்டு வருகிறது. இதனை மூட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதற்கு அச்சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடும் முடிவை கைவிடக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கோவை மத்திய அச்சகம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தேவையான பணி ஆணைகளை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். பணிகளை மேற்கொள்வதற்கான திறன்மிக்க தொழிலாளர்களையும், 132.7 ஏக்கர் நிலப்பரப்பும் கொண்ட அச்சகமாக அது திகழ்வதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகா, கேரளாவில் உள்ள அச்சகங்களை இணைத்தால் தென்னிந்தியாவின் அச்சகமாக திகழும் என்பதால் கோவையில் உள்ள அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

* கோவை மத்திய அமைச்சகம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தேவையான பணி ஆணைகளை வைத்துள்ளது.

* 132.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அச்சகமாக திகழ்கிறது.

* கர்நாடகா, கேரளாவில் உள்ள அச்சகங்களை இணைத்தால் தென்னிந்தியாவின் அச்சகமாக திகழும்.

* கோவை மத்திய அச்சகத்தை மூடும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *