இந்து கோவில்களை இடிப்போம் என்ற சொல்லாடலை தாம் பயன்படுத்தவில்லை; புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்ட உரை குறித்து எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் விளக்கம்……

புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் கூட்டத்தில் இந்து கோவில்களை இடிப்போம் என தாம் கூறவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தலித் இசுலாமியர் எழுச்சிநாள் பொதுக்கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உரையாற்றினார். அப்போது பேசுகையில் இந்தியாவில் உள்ள இந்து கோவில்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புத்த விஹார்களாக இருந்ததாகவும், அவற்றை இடித்து விட்டுத்தான் சிவன் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். எழுச்சிதமிழரின் இந்த உரையை தமிழ் செய்தி ஊடகம் ஒன்று மதவெறியர்களுக்கு ஆதரவாக செயல் படும் விதமாக சித்தரித்து செய்தி, வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் விளக்கமளித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்துக்களை புண்படுத்தும் நோக்கில் தாம் கருத்து சொல்லவில்லை என்றும், இந்து கோவிலை இடிப்போம் என்ற சொல்லாடலை தாம் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் தாம் வாதத்திற்காக கூறியதை சித்தரித்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும், தமது கருத்து தவறாக பொருள் கொள்ளப்பட்டது என்றும் எழுச்சித்தமிழர் கூறியுள்ளார். தம் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் இவ்வாறு திட்டமிட்டு தமக்கு எதிரான அவதூறுகளை பரப்புவதை சிலர் வாடிக்கையாக கொண்டு இருக்கிறார்கள் என்றும் எழுச்சி தமிழர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றி உறுதியானது என்று தெரிவித்த அவர், தேர்தலை ஆணையம் தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *