சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு…..

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுப்பதற்காக பிரசாரத்துக்கு மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 21ம்தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி ஆர்.கே.நகர் தொகுதியில் அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி பிரசாரத்தை மேற்கொள்ளும் வேட்பாளர்கள் தங்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற எண்ணிக்கையை முன்கூட்டியே தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பிரச்சாரத்தின் போது அனுமதி பெற்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக ஆட்கள் அழைத்து வரப்பட்டது தெரியவந்தால், பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிக்கு வெளியே பூத் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்க கூடாது என்றும், வரும் 12ம் தேதியில் இருந்து வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் வேட்பாளரின் தேர்தல் செலவு தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றும், ஒரு வேட்பாளர் அனுமதிக்கப்பட்ட 28 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் அவர் வெற்றி பெற்றாலும் செல்லாது என்று அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

· பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் தங்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற எண்ணிக்கையை முன்கூட்டியே தெரிவித்து உரிய அனுமதி பெற வேண்டும்.

· அனுமதி பெற்ற எண்ணிக்கையைவிட கூடுதலாக ஆட்கள் அழைத்து வரப்பட்டது தெரியவந்தால், பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது

· வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிக்கு வெளியே பூத் அமைக்க தடை

· வரும் 12ம் தேதியில் இருந்து வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையமே பூத் சிலிப் வழங்கும்

· இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 7 வழக்குகள் பதிவு

· வேட்பாளரின் தேர்தல் செலவு தீவிரமாக கண்காணிக்கப்படும்

· வேட்பாளர் ரூ. 28 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்தால் அவர் வெற்றி பெற்றாலும் செல்லாது என்று அறிவிக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *